ADVERTISEMENT

5 லட்சத்திற்கு கீழ் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை! - இந்திய கரோனா நிலவரம்

09:48 AM Jul 03, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் இதுவரை 3.05 கோடி பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (03.07.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 3,05,02,362 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 44,111 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரேநாளில் 57,477 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,96,05,779 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97.01 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.31 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் கரோனாவுக்கு 738 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,01,050 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவிற்கு 4,95,533 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT