உலக அளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை தற்போது இரண்டு கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்நோய்க் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன. கரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் இயல்பு நிலையை இழந்திருக்கும் நிலையில், தற்பொழுது உலக அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு கோடியைக் கடந்துள்ளது. அதேபோல் உலக அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதிக பாதிப்பு உள்ளது. இந்தியாவில் அதன் பாதிப்பு தினமும் அதிகரித்த வண்ணம் இருந்து வருகின்றது.