Skip to main content

என்.டி.ஆரின் மகன் கார் விபத்தில் மரணம்

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
ntr

 

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையும்,  ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆரின் மகனுமான ஹரிகிருஷ்ணா, தெலுங்கானா நல்கொண்டாவில் ஏற்பட்ட கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

 

h

 

திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது நலகொண்டா மாவட்டத்தில் நர்கெட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட  விபத்தில் காயமடைந்த ஹரிகிருஷ்ணா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.  

 

h

 

ஹரிகிருஷ்ணா நடிகரும், தெலுங்கு தேச கட்சியின் பிரமுகரும் ஆன இவர், 2008 ஆம் ஆண்டில் அவர் ராஜ்ய சபைக்கான தேர்தலுக்காக தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து தேர்வானார்.  2.9.1956 பிறந்த நந்தமுரி ஹரிகிருஷ்ணா, நந்தமுரி தாராகா ராமா ராவ்-ன் 4வது மகன் ஆவார்.  நடிகர் பாலகிருஷ்ணா இவரது சகோதரர்.

லஹிரி லஹிரி லஹிரிலோ என்ற படத்தில் நடித்த  ஹரிகிருஷ்ணா, சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றார்.

 

h

 

சார்ந்த செய்திகள்