Skip to main content

என்பிஆர் -க்கு எதிராக டெல்லி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு (NPR-'NATIONAL POPULATION REGISTER') எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


என்பிஆர், சிஏஏவுக்கு எதிராக ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், புதுச்சேரி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான்  உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. 

NPR DELHI ASSEMBLY CM ARVIND KEJRIWAL SPEECH

அந்த வரிசையில் டெல்லி மாநில அரசும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் என்பிஆர் அமல்படுத்தக்கூடாது எனவும் பேரவையில் அறிவிக்கப்பட்டது. மேலும் என்பிஆர் மற்றும் என்ஆர்சி .யை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் சூதாட்டமா?” - தொல்.திருமாவளவன் கேள்வி

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

"A gamble to cheat innocent Hindus?" - Thol.Thirumavalavan question

 

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களை அச்சடித்தால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியிருந்தார்.

 

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தை ஒரு பக்கமும், லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களை மறுபக்கமும் அச்சடிக்க வேண்டும். தெய்வங்களின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் இருப்பது நாடு செழிக்க உதவும். விநாயகர் மற்றும் லட்சுமி படங்களை ரூபாய் நோட்டுகளில் கொண்டு வந்தால் ஒட்டு மொத்த நாடும் அதனால் ஆசிகளை பெறும்.  கடவுள் ஆசி இல்லை என்றால் நம் முயற்சிக்கு சில சமயங்களில் பலன் இருக்காது. இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை. 

 

இந்தோனேசியாவில் இதை செய்துள்ளார்கள். அவர்களின் ரூபாய் நோட்டுகளில் விநாயகரின் உருவம் உள்ளது. நான் இது குறித்து பிரதமர் மோடிக்கு நாளை அல்லது நாளை மறுநாள் கடிதம் எழுத உள்ளேன்” எனக் கூறியிருந்தார்.

 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “அரவ்'இந்து கெஜ்ரி'வால். ரூபாய் தாள்களில் விநாயகர் லக்ஷ்மி உருவங்களை அச்சிட சொல்வது.. குஜராத் மக்களை ஏய்க்கும் தேர்தல் நாடகமா? அல்லது சங் பரிவார்களின் அரசியல் தாக்கமா?

 

அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் சூதாட்டமா? அல்லது சங் பரிவார்களைத் தணிக்கும் தன்னல சூழ்ச்சியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 


 

Next Story

"மே 3- ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு"- டெல்லி முதல்வர் அறிவிப்பு!

Published on 25/04/2021 | Edited on 25/04/2021

 

coronavirus lockdown extended delhi cm arvind kejriwal announced

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. 

 

குறிப்பாக, டெல்லியில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக கரோனா நோயாளிகள் உயிரிழந்தது நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

coronavirus lockdown extended delhi cm arvind kejriwal announced

 

இந்த நிலையில் டெல்லியில் அமலில் உள்ள முழு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

 

டெல்லியில் இன்று (25/04/2021) செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "கரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் ஆறு நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3- ஆம் தேதி அன்று அதிகாலை 05.00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

 

நாளை (26/04/2021) அதிகாலை 05.00 மணிக்கு முழு ஊரடங்கு முடிய இருந்த நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.