Advertisment

இப்போ விழுமோ எப்போ விழுமோ? - ஹெல்மெட்டுடன் பணியாற்றும் அரசு ஊழியர்கள்

 'Now or when will it fall?'-Government employees working with helmets

அரசு அலுவலகக்கட்டடம் பாழடைந்து கிடக்கும் நிலையில், அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அச்சத்தில்ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியாற்றும் வினோத சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

தெலுங்கானாவில் ஜெகத்தியாலா மாவட்டம் பீர்பூர் நகரில் உள்ளது மண்டல பரிஷத் அலுவலகம். இந்த அலுவலகத்தின் கட்டடம் மிகவும் பாழடைந்துள்ளது. இதனால் எப்பொழுது வேண்டுமானாலும்இடிந்து விழலாம் என்ற அச்சத்தில், அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உள்ளனர். பலமுறை வேறு கட்டடத்திற்கு அலுவலகத்தை மாற்றும்படி ஊழியர்கள்கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கோரிக்கை வைத்த போதிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும் அங்கே பணி செய்யத்தான் வேண்டும் என்ற கட்டாயத்திற்கும் உள்ளாகியுள்ளனர். எப்பொழுது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் இருக்கும் ஊழியர்கள், ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே இந்த அலுவலகத்தின்சில இடங்கள் இரண்டு முறை இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Advertisment

helmet TELAGANA
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe