Advertisment

மிஸ்டு கால் மூலம் எல்பிஜி இணைப்பு பெறும் வசதி அறிமுகம்!

Advertisment

indian oil

எல்பிஜி இணைப்பை மிஸ்டு கால் மூலம் பெறும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம்8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து, புதியஎல்பிஜி இணைப்பை பெறலாம். அதேபோல் இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன்மூலம் எரிவாயு எல்பிஜி சிலிண்டரை முன்பதிவும் செய்யலாம்.

Advertisment

அதேபோல் வாடிக்கையாளர்கள் இரட்டை எரிவாயு இணைப்பு பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏற்கனவேஎல்பிஜி இணைப்பு வைத்திருப்பவர்கள், இரட்டை சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற முடியும்.

இந்த மிஸ்டு கால் மூலம் எல்பிஜி இணைப்பு பெறும் வசதியைத் தொடங்கிவைத்த எஸ்.எம். வைத்யா, இந்தத் திட்டம் முதியவர்களுக்கும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பயனளிக்கும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

indian oil lpg cylinder
இதையும் படியுங்கள்
Subscribe