Skip to main content

நவம்பர் மாதத்தில் ரூபாய் 1.04 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல்!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

nov month gst tax ministry of finance

 

நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி, ரூபாய் 1,04,963 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. 

 

மத்திய நிதியமைச்சகம் ஒவ்வொரு மாதத்திற்கான ஜி.எஸ்.டி வரி வசூலை அறிவித்து வருகிறது. அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி வரி வசூலை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வசூலில், சி.ஜி.எஸ்.டி (மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூல்) ரூபாய் 19,189 கோடியும், (மாநில அரசின் ஜி.எஸ்.டி வசூல்) எஸ்.ஜி.எஸ்.டி ரூபாய் 25,540 கோடியும், ஐ.ஜி.எஸ்.டி 51,992 கோடியும், செஸ் 8,242 கோடியும் வசூலாகியுள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டு நவம்பர் மாத வசூலை விட 1.4% அதிகம்; பொது முடக்கத்திற்குப் பின் மீண்டும் ஜி.எஸ்.டி வசூல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாட்டிற்கு ரூபாய் 7,054 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய நிதியமைச்சகம்!

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

Central Finance Ministry allocates Rs 7,054 crore to Tamil Nadu

 

நடப்பு நிதியாண்டில் மின்சாரத்துறையின் சீரமைப்புக்காக ஆந்திரா, உத்தரபிரதேசம், அசாம், ஒடிஷா, சிக்கிம் உட்பட 10 மாநிலங்களுக்கு ரூபாய் 28,204 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய நிதியமைச்சகம். 

 

அதன்படி, ஆந்திர பிரதேசத்திற்கு ரூபாய் 3,716 கோடியும், அசாம் மாநிலத்திற்கு ரூபாய் 1,886 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூபாய் 251 கோடியும், மணிப்பூருக்கு ரூபாய் 180 கோடியும், மேகாலயாவுக்கு ரூபாய் 192 கோடியும், ஒடிஷாவுக்கு ரூபாய் 2,725 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூபாய் 5,186 கோடியும், சிக்கிமிற்கு ரூபாய் 191 கோடியும், தமிழ்நாட்டிற்கு ரூபாய் 7,054 கோடியும், உத்தரப்பிரதேசத்திற்கு ரூபாய் 6,823 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


 

Next Story

பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூபாய் 1,33,026 கோடியாக உயர்வு!

Published on 02/03/2022 | Edited on 02/03/2022
GST collection rises to Rs 1,33,026 crore in February

 

நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாய் 1,33,026 கோடியாக அதிகரித்துள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாய் 1,33,026 கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 18% அதிகம் ஆகும். அதேநேரம், கடந்த ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலான ரூபாய் 1,40,986 கோடியுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வசூலில் இந்தியாவிலேயே மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவை அடுத்து, தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. 

 

தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5% அதிகரித்து 7,393 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் காரணமாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடு போன்றவற்றை அமல்படுத்தியதே ஜிஎஸ்டி வசூல் குறைந்ததற்கு காரணம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.