Advertisment

நீட் தேர்வு; விண்ணப்ப பதிவிற்கான அறிவிப்பு வெளியீடு!

Notification Release for Application Registration for NEET Exam

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்ய வேண்டிய தேதியை தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு(2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத்தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதிஅறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத்தேசிய தேர்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

அதன்படி, இன்று (10-02-24) முதல் நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத்தெரிவித்துள்ளது. மேலும், www.nta.ac.in, exams.nta.ac.in ஆகிய இணையதள முகவரிகள் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

neet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe