Advertisment

தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

Notification of National Writer Award 2023

தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு இந்த ஆண்டிற்கானதேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரைக்கவுரவிக்கும் வகையில் தேசிய நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் இந்த விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் என்பவரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருதை வழங்க உள்ளார்.

Award teacher
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe