Advertisment

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான தேதி அறிவிப்பு

Notification of date for Winter Session of Parliament

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர் மாதம் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Advertisment

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இதன்படி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 15 நாட்கள்நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த விவகாரம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணைஅமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்குவது போன்ற பிரச்சனைகளை எழுப்பக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதால், இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Parliament
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe