Nothing will be bought from Chinese company anymore - IMRC announcement !!

Advertisment

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974ஆக உயர்ந்துள்ள நிலையில், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 934 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,869 ஆகவும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தரமற்ற ரேபிட் டெஸ்ட்கருவிகளை தந்த சீன நிறுவனத்திடம்இனி எந்த பொருட்களும் வாங்கப்பட மாட்டாது எனஇந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில்தெரிவித்துள்ளது.கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவிலிருந்து கடந்த வாரம்கரோனாவைஉடனடியாக பரிசோதனை செய்து அறிந்துகொள்ள ரேபிட் டெஸ்ட்கருவிகள் லட்ச கணக்கில் ஆர்டர் செய்துசீனாவில் இருந்துவரவழைக்கப்பட்டு நாடு முழுவதும் பல இடங்களுக்குஅனுப்பிவைக்கப்பட்டன.

இப்படி அனுப்பிவைக்கப்பட்ட இந்த ரேபிட் டெஸ்ட்கருவிகள் முறையாக செயல்படவில்லை, முடிவுகள் தவறாக வருவதாககுற்றச்சாட்டுகள்எழுந்தது. இதனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கரோனா பரிசோதனைக்கு ரேபிட் டெஸ்ட்கருவிகளைபயன்படுத்துவதைஇரண்டு நாட்கள் நிறுத்தி வைக்க அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தரமற்றரேபிட் டெஸ்ட்கருவிகளை அனுப்பியசீனநிறுவனத்திடம்இனி எந்த பொருட்களும் வாங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளதுஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்.