"பாதுகாப்பை தளர்த்திக்கொள்ள இது நேரமல்ல" - இந்திய கரோனா நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

soumya swaminathan

இந்தியாவில் கடந்தாண்டு பரவத்தொடங்கிய கரோனாவைரஸ், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட இரண்டு கரோனா அலைகளிலும் சேர்த்து 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் முதல் அலையைவிட இரண்டாவது அலையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தநிலையில்தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்துள்ளது.

இருப்பினும் கரோனாமூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில்உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா சுவாமிநாதன், இன்னும் ஆறு மாதங்களுக்கு இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்என கூறியுள்ளார்.

இதுதொடர்பாகஅவர், "இன்னும் சில காலத்திற்கு, மக்கள் கரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பை தளர்த்திக்கொள்வதற்குஇது நேரமல்ல. இன்னும் ஆறு மாத காலத்திற்கோஅல்லது அதற்கு மேலோஎச்சரிக்கையாக இருப்போம். அதற்குள் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டால், நிலைமை மேம்படும்" என கூறியுள்ளார்.

corona virus Who
இதையும் படியுங்கள்
Subscribe