Advertisment

சட்டசபை தேர்தல்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்கு? - மத்திய அமைச்சர் பதில்!

ravishankar prasad

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, “வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிக்கும் திட்டம் அடுத்த ஓராண்டிற்குள்அமல்படுத்தப்படலாம்” என தெரிவித்தார்.

Advertisment

இந்தநிலையில் நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “விரைவில் நடக்க இருக்கின்றஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில்வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வசதியைஏற்படுத்துவது சாத்தியமில்லை” என தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாகஎழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், "வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வசதியைஏற்படுத்துவதில்உள்ள நடைமுறை சிக்கல்களைக் களைவது தொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதால், வரவிருக்கும் மாநில தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துவது சாத்தியமில்லாதது" என கூறியுள்ளார்.

Assembly election nri Voting
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe