s

சர்கார் படத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் விமர்சிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சர்கார் படத்திற்கும், நடிகர் விஜய்க்கும் தனது எச்சரிக்கையை தெரிவித்தார்.

Advertisment

அவர், ‘’சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்கான சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அரசுக்கு தகவல் வந்துள்ளது. வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழுவினர் நீக்கிவிட்டால் நல்லது. இல்லையெனில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்’’ எச்சரித்தார்.

Advertisment