Not Fund to Provide GST Compensation- Central Government

Advertisment

கரோனா காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு மற்றும் நிதி சுமையில் சிக்கி இருக்கும் மாநில அரசுகள் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசிடம் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை கோரிவரும் நிலையில்,தற்போதுமத்திய அரசு மாநிலங்களுக்கு உரிய ஜி.எஸ்.டிஇழப்பீடுதொகையை வழங்க நிதி இல்லை என்ற தகவலை தெரிவித்துள்ளது.

ஏப்ரல்-ஜூலை மாதம் வரையிலான ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு வழங்க போதிய நிதி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி வசூல்குறைவாக இருப்பதால் தற்போதுமாநிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

மொத்தமாக மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி தொகையாக மத்திய அரசு 1.50 லட்சம் கோடி வழங்க வேண்டியுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் 11,700 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.