Not even a Tamil researcher has the opportunity to write about 12,000 years of Indian history and culture

Advertisment

இந்தியாவின் தோற்றம், பரிணாமம், வளர்ச்சி குறித்து வரலாறு எழுத மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இந்தியாவின் தொன்மையும் வரலாறும் நிறைந்துள்ள தென்னிந்தியாவல் இருந்து ஒரு ஆய்வாளர், அறிஞருக்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. மாறாக 6-க்கும் மேற்பட்ட சமஸ்கிருத ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 30 ஆயிரத்திற்கும் மேலான கல்வெட்டுகளை ஆதாரமாக கண்டறிந்த பெருமையுள்ளதமிழக ஆய்வாளர்கள், அறிஞர்கள் இல்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. மிகவும் பழமையான வரலாற்றையும், நாகரீக வாழ்க்கையும் கொண்ட தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டே தமிழக வரலாற்றை கலாச்சாரத்தை மறைப்பதாக இதுஉள்ளது.

Advertisment

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வரலாறும் கல்வெட்டுகளும் ஏராளம் தமிழகத்தில் இருக்கும்போது தமிழக ஆய்வாளர்களை புறக்கணித்திருப்பது தமிழர்களின் வரலாற்றை திட்டமிட்டே மறைக்க செய்யும் சூழ்ச்சியாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தமிழக உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.