உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநில தேர்தல் 2024 நாடாளுமன்றத்தேர்தலின் முன்னோட்டமாகக் கருதப்படுவதால், இந்தத் தேர்தல்களின் முடிவுகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அதிலும், உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து மிகுந்தஎதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் இந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை தங்களது பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் சந்திக்கவுள்ளது. இந்தச் சூழலில்இன்று (19.10.2021) செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி, "உத்தரப்பிரதேச தேர்தலில், 40 சதவீத சீட்டுகள் பெண்களுக்கு வழங்கப்படும்”என அறிவித்தார்.
இதன்பின்னர்பிரியங்கா காந்தியிடம் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில்,ரேபரேலி அல்லது அமேதி தொகுதியில் போட்டியிடுவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துள்ள பிரியங்கா காந்தி, "ஒருநாள் நான்போட்டியிடத்தான்வேண்டும். ஆனாலும்இன்னும் அதுகுறித்து முடிவெடுக்கவில்லை. தற்போதைக்கு எந்த பதிலும் இல்லை. பிறகு பார்க்கலாம்" எனத்தெரிவித்துள்ளார்.