Northeast Monsoon; Chance of rain for 7 days in Tamil Nadu

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும், கேரளாவை பொறுத்தவரை இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி கடலூர், திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.