Advertisment

பிடிபட்ட வடமாநிலத்தவர்! கைப்பற்றப்பட்ட ஏராளமான வீடியோக்கள்!

north indian workers incident police catched video evidences

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் வடமாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான போலி தகவல்கள் தொடர்பான விவகாரத்தில் வதந்தி பரப்பியவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் தமிழக போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment

இதனிடையே வடமாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியை அடுத்து பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் குழு சென்னை வந்த நிலையில், பீகார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன்தலைமையில் தொழிலாளர் நலத்துறை செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்குழுவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி தமிழ்வாணன் உள்ளிட்டோர் கொண்ட குழுவும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். மேலும் வடமாநிலத்தொழிலாளர்கள்தமிழகத்தில் பாதுகாப்பாக இருப்பதைஇந்த குழுவினர் உறுதி செய்தனர்.

Advertisment

இந்நிலையில், பீகார் மாநில காவல்துறைகூடுதல் தலைமை இயக்குநர் ஜே.எஸ்.கங்கவார் கூறுகையில், "தமிழகத்தில் பீகார் மாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகக் கூறி வெளியான வீடியோக்கள்குறித்து விசாரிப்பதற்காகமாநிலபொருளாதாரக் குற்றப்பிரிவினர் தலைமையில்10 பேர் கொண்ட தனிப்படைஅமைக்கப்பட்டுஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பொய்யான தகவல்களைப் பரப்பிய அமன் என்பவரைஜமுய் மாவட்டத்தில் கைது செய்தனர். மேலும், இவரிடம் இருந்து வழக்கு தொடர்பாக 30 வீடியோ பதிவுகளையும், இணைய இணைப்புகளையும் ஆய்வு செய்தனர். அவற்றில் 4 வீடியோக்களும், 4 செய்திகளும் பொய்யான தகவல்களைக் கொண்டவையாகும். மேலும் தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம்" என்று கூறினார்.

Bihar police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe