ராஜஸ்தான் மாநிலம் சுறு மாவட்டத்தை சேர்ந்த கவுட்டி என்ற 45 வயது பெண்ணுக்கு 11 பெண் குழந்தைகள் உள்ளன. தொடர்ந்து பெண் குழந்தையை பெற்று வருகிறார் என கவுட்டியின் உறவினர்கள் அவரை ஏளனமாக பேசியுள்ளனர். இதனால் அவர் கடுமையான மன உளச்சலுக்கு ஆளாகியிருந்தார். ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் அது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என அவரது உறவினர்கள் எண்ணியுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து 11 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

Advertisment

jh

இதில் 3 பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டது. 6 பெண் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். 2 குழந்தைகளுக்கு இன்னும் 5 வயது ஆகாததால் பள்ளியில் சேர்க்காமல் வீட்டில் இருக்கிறார்கள். இந்நிலையில் 12வது முறையாக கவுட்டிக்கு நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தனை பிள்ளைகளையும் எப்படி வளர்த்து வருகிறீர்கள் என்ற கேள்விக்கு சிறு புன்னகையை மட்டுமே பதிலாக தருகிறார் கவுட்டி. பெற்ற தாய்க்கு அதனை வளர்க்க தெரியாதா என்ன!