சில நாட்காளாகவே இரவு நேரங்களில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றன. இது சம்பந்தமாக ஒரு சில வீடியோ பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது இதற்கு ஒரு தீர்வை வடகிழக்கு ரயில்வே கொண்டுவர திட்டமிட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ரயில் பெட்டிகளில் "அவரசரகால பட்டனை" பொறுத்தவுள்ளது.

Advertisment

north eastern railways itroduce

இதுகுறித்து வடகிழக்கு ரயில்வே தலைமை அதிகாரி சஞ்சய் யாதவ் கூறியது, “முன்பெல்லாம் ரயில் பெட்டிகளில் பெண்களுக்கு ஆபத்து என்றால் செயினை பிடித்து இழுப்பது, அவசர கால எண்ணிற்கு அழைப்பது என்று இருக்கும். அதைவிட இந்த பட்டனை அழுத்தி உதவி கேட்பது மிகவும் சுலபமானஒன்று. மேலும் இந்த ‘அவசரகால பட்டன்’ பாதுகாப்பு அதிகாரியின் பெட்டிக்கு இணைக்கப்பட்டுள்ளது. அழுத்தினால் உடனே உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும்.

அனைத்து பெட்டிகளிலும் வெவ்வேறு வண்ணங்களில் இந்த பட்டன் பொருத்தப்படும் பெண்களின் பெட்டியில் ஜன்னல் பக்கத்தில் இதுஇருக்கும். அதுமட்டுமில்லாமல் பிளாட் ஃபார்ம்கள் போல பெண்களின் பெட்டிகளில் சி.சி.டிவி கேமரா பொருத்தப்படும். அதன் முலம் பெண்களின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும். யாராவது பெண்களிடம் தவறாக நடந்துகொண்டால் ரயில்வே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவர். இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த பட்டன் அனைத்து ரயில்களிலும் பொருத்தப்படும்"