/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/delhi dust.jpg)
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த கனரக வாகனங்களை டெல்லி நகருக்குள் இயக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்தது. அதன்படி டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்கு நேற்றிரவு 11 முதல் மூன்று நாட்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுவின் அளவு உச்சகட்டத்தை அளவை எட்டியுள்ளது. வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. தீபாவளிக்குப் பின் இது மேலும் மோசமடைந்து காற்று மாசு படிப்படியாக உயர்ந்து அபாய அளவை தாண்டியுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு 11 மணி முதல் டேங்கர் லாரிகள், சரக்கு லாரிகள் போன்ற கனரக வாகனங்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றன. தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி அனுப்பபடுகின்றன. அத்தியாவசிய பொருட்களை கொண்டுவரும் கனரக வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள வடக்கு பகுதியில் மரங்களின் இலைகளில் இருக்கும் தூசியை வடடெல்லி மாநகராட்சி நீரை பீய்ச்சி இலைகளில் உள்ள தூசியை எடுத்து வருகின்றனர். அந்த பகுதியில் மாசு அதிகளவில் இருப்பதால், அந்த மாசை ஒழிக்க உதவியாய் இருக்கும் மரங்களில் இலைகளுக்கு உதவும் வகையில் இவ்வாறு செய்யப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)