ADVERTISEMENT

அமெரிக்கா மற்றும் கனடாவில் தொடர் நிலநடுக்கங்கள்...அச்சத்தில் மக்கள்!

11:22 AM Jul 06, 2019 | santhoshb@nakk…

அமெரிக்காவில் முக்கிய பகுதிகளில் ஒன்றாக உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன் தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள், மற்ற கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்தன. சாலைகளில் பல்வேறு இடங்களில் பிளவுகள் ஏற்பட்டன. வீடுகளுக்கு நிலத்துக்கு அடியில் கொண்டு செல்லப்படும் சமையல் எரிவாயு குழாயிலும் சேதம் ஏற்பட்டது. இதனால் 2 வீடுகளில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. நிலநடுக்கத்தின் போது அங்குள்ள ஒரு மருத்துவமனை பலத்த சேதம் அடைந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 7 புள்ளி ஒன்று எனும் ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ட்ரோனா மற்றும் ரிட்ஜெக்ரெஸ்ட் நகரங்கள் குலுங்கின. ஏற்கெனவே ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கேஸ் பைப் உடைந்து இரு வீடுகள் தீப்பற்றின. இதன் காரணமாக தென் கலிஃபோர்னியா மாகாண மக்கள் அச்சமடைந்துள்ளன. இந்த நிலையில் கனடாவில் வான்கோவர் தீவின் வடகடலோர பகுதியில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 5 புள்ளிகள் என பதிவாகி உள்ளது. இருப்பினும் சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT