வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரியில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், தற்போது கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புதுச்சேரி நகர பகுதிகளிலும், அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர், ஊசுடு உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. மழை தொடர்ந்து நீடிப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.