
பைக்குடன் கீழே சாய்ந்து விட்டது போல் உதவி கேட்டு நூதன முறையில் நாடகமாடி செல்போன் திருடும் கும்பல் குறித்து ஆந்திராவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நூதனமாக நடைபெறும் திருட்டுக்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகும். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திராவின் ஒரு பகுதியில் நிகழ்ந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பதிவாகியுள்ள அந்த வீடியோ காட்சியில் முக்கியமான சாலை பகுதியின் கடை ஒன்றின் வெளியே காத்திருக்கும் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்திருக்கிறார். கடையிலிருந்து நபர் ஒருவர்வருவதை அறிந்து கொண்ட அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை இயக்க ஆரம்பிப்பது போல் முயல்கிறார். தொடர்ந்து சிறிது தூரம் வாகனத்தை இயக்க, திடீரென தடுமாறி கீழே விழுவது போலவும் தன்னை காப்பாற்றும்படி சைகை செய்கிறார். இதனை நடிப்புஎனஅறியாத அந்த நபர் அந்த இளைஞரை இருசக்கர வாகனத்தோடு தூக்கி நிறுத்த உதவ முயலுகையில் அவருடைய சட்டைப் பையில் இருக்கும் செல்போனை திருடிக் கொண்டு அந்தஇளைஞர்சட்டென்று அங்கிருந்து கிளம்புகிறார். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்ட செல்போனை தவறவிட்ட நபர், தான் ஏமாற்றப்பட்டது அறிந்து கூச்சலிடுகிறார். தற்போது இதுதொடர்பான இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow Us