Advertisment

8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் பெயர் பரிந்துரை!

Nomination of Chief Justices for 8 High Courts!

Advertisment

அலகாபாத் உள்ளிட்ட 8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, அலகாபாத்- ராஜேஷ்பின்தால், கொல்கத்தா- பிரகாஷ் ஸ்ரீவத்சவ், ஆந்திரா- பிகே மிஸ்ரா, கர்நாடகா- ரித்துராஜ் அஸ்வதி, தெலங்கானா- சதீஷ் சந்திர சர்மா, மேகாலயா- ரஞ்சித் வி மோர், குஜராத்- அரவிந்த்குமார், மத்தியப் பிரதேசம்- ஆர்.வி.மலிமத் ஆகியோரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதனை பரிசீலிக்கும் மத்திய சட்டத்துறை அமைச்சகம் கொலிஜியம் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து, குடியரசுத்தலைவரின் ஒப்புதல் அனுப்பும்.

அதைத் தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குக்குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்து, தலைமை நீதிபதிகளின் நியமனம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

chief judges highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe