Skip to main content

நோக்கியா அறிமுகம் செய்யும் புதிய வாழைப்பழம் கைபேசி..!

Published on 11/10/2018 | Edited on 11/10/2018

நோக்கியா மொபைல் புதிதாக தனது இரண்டு மாடல்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஒரு மாடல் அக்டோபர் 23-ஆம் தேதியும் மற்றொரு மாடல் அக்டோபர் 11-ஆம் தேதியும் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. 

 

nn

 

முதலில் அக்டோபர் 11-ஆம் தேதி வரவிருப்பது நோக்கியா 3.1 பிளஸ் அடுத்தது அக்டோபர் 23-ஆம் தேதி வரவிருப்பது நோக்கியா 8110. இதில் நோக்கியா 3.1 பிளஸ் இந்த தலைமுறைக்கு ஏற்றதுபோல் ஆண்ட்ராய்டு 8.1, டச் ஸ்க்ரீன், பின் பக்க கேமரா 13 எம்பி மற்றும் 5 எம்பி, 8 எம்பி செல்ஃபீ கேமரா என்றும் இருக்கிறது. ஆனால், இந்த நோக்கியா 8110 முற்றிலும் வேறு, இது 1990-களில் பிறந்தவர்களுக்கானது என்றே சொல்லலாம். காரணம், இந்த மாடலில் வெறும் 2.4 இன்ச் டிஸ்பிலே, 2 எம்பி பின்பக்க கேமரா என்று இருக்கிறது. அதேசமயம் இந்த போனில் கூகுள் மேப், பேஸ்புக் போன்ற விஷயங்களை பயன்படுத்தலாம். இதன் விலை ரூ. 5,999 என்றும் 3.1 பிளஸ் ஃபோனின் விலை ரூ. 11,499 என்றும் நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இது எல்லாவற்றையும்விட சிறப்பு, நோக்கியா 8110 மாடலின் பெயர் 'பனானா மொபைல்' அதாவது தமிழில் வாழைப்பழம் கைபேசி. இதற்கு காரணம் 8110 மாடல் பார்ப்பதற்கு வாழைப்பழம் போன்றே இருக்கும்.

சார்ந்த செய்திகள்

Next Story

"நவம்பர் ஒன்று முதல் இந்த மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது" - நிறுவனம் அறிவிப்பு!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

whatsapp

 

பிரபலமான தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப், படிப்படியாக பழைய மொபைல் ஃபோன்களுக்கு தனது சேவையை வழங்குவதை நிறுத்திவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் நவம்பர் ஒன்றாம் தேதி முதல், 4.0.3 அல்லது அதைவிட குறைவான இயங்குதளம் கொண்ட மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 

அதேபோல், 9 அல்லது அதற்கு குறைவான ஐ.ஓ.எஸ்களைக் கொண்ட ஆப்பிள் ஐ-போன்களிலும் நவம்பர் ஒன்று முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது என அந்தநிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஐ-போன் எஸ்.இ., ஐ-போன் 6 எஸ், ஐ-போன் 6 எஸ் பிளஸ் ஆகியவற்றில் இனி வாட்ஸ்அப் செயலி இயங்காது.

 

பயனர்களால் தங்களது மொபைல் ஃபோனின் இயங்குதளத்தை (operating system) அப்கிரேட் செய்ய முடிந்தால், அவர்களால் வாட்ஸ்அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

'பெகாசஸ் ஸ்பைவேர்' மென்பொருள் குறித்து பார்ப்போம்!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

Pegasus Spyware software issues in parliament

 

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமத்தில் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உளவுப் பார்க்கப்பட்டதாக புயல் கிளம்பி இருக்கிறது. இந்த ஸ்பைவேர் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

 

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமம் ஸ்பைவேர் பெகாசஸ் என்ற மென்பொருளைத் தயாரித்துள்ளது. இதனை பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது அந்நிறுவனம். ஸ்பைவேர் என்பது ஒருவருக்கு தெரியாமல் அவரை வேவுப் பார்க்கக்கூடிய மென்பொருள். இந்த ஸ்பைவேர் ஒருவரது ஸ்மார்ட்ஃபோனில் ஒரு தொடுதலும் இல்லாமலே ஊடுருவி தனிப்பட்ட தகவல்களைப் பார்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபோனில் இருக்கும் 'BUG' மூலம் பெகாசஸ் ஸ்பைவேர் உள்ளே நுழைந்து விடும் (அல்லது) இது காத்திருக்கும் லிங் எதையாவது ஒருவர் கிளிக் செய்வதன் மூலமும் உள்ளே நுழைந்து விடும். ஐ.ஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதள ஃபோனில் பெகாசஸ் ஸ்பைவேர் ஒட்டுக்கேட்கவும், மெசேஜ்களைப் படிக்கவும் முடியும். ஃபோன் கேமரா மற்றும் மைக்கை அவருக்கு தெரியாமலேயே இயக்கவும் முடியும். ஜி.பி.எஸ்.சை தானாகவே இயக்கி, நகர்வுகளைக் கண்காணிக்க முடியும். எண்ட் டூ எண்ட் என்க்ஸ்ரிப்ட் எனப்படும் குறியாக்கம் செய்த தகவலைக் கூட பெகாசஸ் பார்க்க முடியும்.

 

ஊடுருவ வேண்டிய செல்ஃபோனை அடையாளம் கண்டதும், இலக்கு உரிய நபரை தனது முயற்சிக்கு வரவழைக்க வலைத்தள இணைப்பை அனுப்புவர். குறிப்பிட்ட நபர் அந்த லிங்கை கிளிக் செய்ததும் அவரது ஃபோனில் பெகாசஸ் இன்ஸ்டால் ஆகிவிடும் (அல்லது) வாட்ஸ் ஆப் கால்களில் உள்ள 'BUG' வழியாகவும் ஊடுருவல் நடைபெறும். மிஸ்டுகால் அனுப்பியும் ஃபோனில் இன்ஸ்டால் செய்ய முடியும். அழைப்பு பட்டியலில் இருந்து அந்த எண் நீக்கப்படுவதால், அதுபற்றி பயனருக்கு நடந்த விஷயம் தெரியாது. பெகாசஸ் ஸ்பைவேர் புதிதல்ல. 2016- ல் ஐஃபோன் பயனர்களை இது குறி வைப்பதாகக் கூறப்பட்டது. 

 

பிறகு, 2019- ல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதை உளவு பார்க்க பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. ஆனால், அப்போது அரசால் அந்த தகவல் மறுக்கப்பட்டது. பயங்கரவாத செயல்கள், "சதித்திட்டம் தீட்டுபவர்களை உளவு பார்க்க மட்டுமே இந்த ஸ்பைவேர் உருவாக்கி நாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. பெகாசஸ் மூலம் மனித உரிமை மீறல்களில் அரசுகள் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவாதம் பெறுவதாகக் கூறுகிறது" என்.எஸ்.ஓ.நிறுவனம் கூறுகிறது. 

 


  

   A