Advertisment

சுங்க வரி கட்டாத லாரி டிரைவர்... கொலை செய்த டோல் பூத் பணியாளர்கள்...

உத்தரப் பிரேதசம் மாநிலத்திலுள்ள நொய்டாவில் ஏழு டோல் பிலாசா பணியாளர்கள் சேர்ந்து சுங்க வரி செலுத்தாத லாரி டிரைவர் விமல் டிவாரி என்பவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

Advertisment

toll killers

டெல்லியிலுள்ள எம்சிடி சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஏழு பணியாளர்கள் விமல் டிவாரி என்ற லாரி டிரைவரிடம் ரூ. 14,600 சுங்கவரியை செலுத்த சொல்லியிருக்கின்றனர். அந்த டிரைவரால் செலுத்த முடியாததால், அவரை அடித்து உதைத்து கொன்றுள்ளனர். இதனையடுத்து அவருடைய உடலை நொய்டாவில் யமுனை ஆற்றுக்கரை ஓரம் தூக்கிவீசிவிட்டு வந்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி டிவாரியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தையநாள் இரவில்தான் இவர்கள் அங்கு தூக்கி வீசியுள்ளனர் என்பது தெரியவருகிறது.

காவல்துறையின் தீவிர விசாரணையில் இந்த கொலை சம்பவம் மற்றும் அவருடைய உடல் எங்கே வீசப்பட்டது என்பதை அந்த கொலை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது இந்த கொலையை கூட்டம் செய்த அந்த ஏழு பேரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Delhi noida Toll Plaza
இதையும் படியுங்கள்
Subscribe