Advertisment

வாகன நம்பர் பிளேட்டில் சாதிப்பெயர்... போலீசார் அதிரடி நடவடிக்கை...

தங்களது வாகன நம்பர் பிளேட்டுகளில் சாதிப்பெயர்களை எழுதியிருந்த 250 பேருக்கு போலீசார் அபராதம் விதித்த சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.

Advertisment

noida police fined vehicles with caste related quotes

உத்தரப்பிரதேசத்தின் நொய்டா பகுதியில் தீபாவளியை முன்னிட்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, நூற்றுக்கணக்கான வாகனங்களில் சாதி பெயர்கள் மற்றும் சாதி ரீதியிலான வாசகங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். அப்படிப்பட்ட வாகனங்களை மறித்து போலீசார் அபராதம் விதித்தனர். நொய்டா பகுதியில் மட்டும் 133 வாகனங்கள், சாதி கருத்துகள் அல்லது அது தொடர்பாக சவால் விடுக்கும் சொற்களை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறையை தூண்டும் விதமாக வாசகங்கள் எழுதப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

noida uttarpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe