Advertisment

21 வயது மாணவியை கத்தியால் குத்திவிட்டு, 8 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த 15 வயது சிறுவன்...

21 வயதான பி.டெக் மாணவி ஒருவரை கத்தியால் குத்திவிட்டு 8 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

noida apartment incident

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 61-வது செக்டாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 8 ஆவது மாடியில் கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை மாணவியின் பெற்றோர் வெளியில் சென்றதால்,அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன் அந்த மாணவியின் வீட்டிற்கு வந்துள்ளான்.

மாணவியை பார்த்தவுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் சரமாறியாக குத்தியுள்ளான். வலியால் துடித்த அந்த பெண் கூச்சலிட்டதில் அக்கம்பக்கத்தினர் அங்கு கூடியுள்ளனர். அதற்குள் அந்த சிறுவன் அந்த பெண்ணை ஒரு அறையில் தள்ளி பூட்டிவிட்டு அவனும் மற்றொரு அறையில் புகுந்துகொண்டுள்ளான். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவனையில் அனுமதித்த நிலையில், அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

அதேநேரம் சிறுவனை அங்குள்ள மக்கள் தேடியபோது பூட்டிய அறைக்கு பின்னால் கீழே விழுந்துக் கிடந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டுசென்று பரிசோதித்துள்ளனர். அப்போது, அந்த சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

noida uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe