"50 சதவீதமே இடஒதுக்கீடு என்ற விதியை மீற காரணம் இல்லை" - மராத்தா இடஒதுக்கீட்டை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

SUPREME COURT

மஹாராஷ்ட்ராமாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் மராத்தா சமூகத்தினருக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீடு, இடஒதுக்கீடுஎன்பது 50 சதவீதம்தான்இருக்க வேண்டும் என்ற விதிமுறையைமீறுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குஉச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. முந்தைய விசாரணைகளின்போது, "சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தண்டலாம்.இந்திய அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையின்பாதுகாப்பு அதற்கு உண்டு" எனஉச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்தநிலையில், மராத்தா இடஒதுக்கீட்டுக்குஎதிரான வழக்கின் தீர்ப்பை இன்று (05.05.2021) உச்ச நீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில்,மராத்தா இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் இரத்துசெய்துள்ளது. இதுதொடர்பான தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், "மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக, இடஒதுக்கீடு 50 சதவீதம்தான் இருக்க வேண்டுமென்ற விதியை மீற எந்த சரியான காரணமும்இல்லை" என கூறியுள்ளது. மேலும், "மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அவர்களைசமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் என அறிவிக்க முடியாது" எனவும் தெரிவித்துள்ளது.

Maharashtra maratha reservation supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe