இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசிகளை மக்களுக்குச்செலுத்தும் பணிகள், கடந்த ஜனவரி 16 ஆம் தேதியிலிருந்துநடைபெற்று வருகிறது. இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணிகளில், சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல்கரோனாதடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பிப்ரவரி 13 முதல் சுகாதாரப் பணியாளர்களுக்குசெலுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்துஇரண்டாம் கட்டமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்குமேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் கரோனா தடுப்பூசி வழங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கரோனாதடுப்பூசிசெலுத்தும் பணிகள்தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
கரோனாதடுப்பூசிபணிகளைஒருங்கிணைக்கும் கோ-வின்செயலி, 1.0 வெர்சனிலிருந்து 2.0 வாக தரம் உயர்த்தும்பணிகள்நடைபெற இருப்பதால், கரோனாதடுப்பூசிசெலுத்தும் பணிகள் நாளையும் (27.02.21), நாளை மறுநாளும்(28.02.21)நடைபெறாதுஎனமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.