ghj

கடை ஊழியர்கள் ஸ்பூன் தரவில்லை என்று கூறி முதல்வர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இளைஞர் ஒருவர் புகாரளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மத்தியப் பிரதேச மாநிலம் அகமது புரி பகுதியைச் சேர்ந்தவர் வன்ஷ் பகதூர், 28 வயது இளைஞரான இவர், அப்பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அலுவலகத்துக்கு வெளியே உள்ள கடையில் சமோசா சாப்பிட சென்ற அவருக்கு கடை ஊழியர்கள் நெகிழி பேப்பரில் சமோசா கொடுத்துள்ளனர். அவர் ஏன் தட்டு, ஸ்பூன் தரவில்லை என்று கேட்டுள்ளார். அதற்குக் கடை ஊழியர்கள் முறையாகப் பதிலளிக்காத நிலையில், அவரை கடையிலிருந்து வெளியேறச் செய்துள்ளனர். இதனால் அவமானம் அடைந்த அவர், நேரடியாக முதல்வர் அலுவலக ஹெல்ப் லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டு புகாரளித்தார். புகாரை தொடர்ந்து அதிகாரிகள் அந்த கடை ஊழியர்களைத் தொடர்பு கொண்டு கடும் எச்சரிக்கை விடுத்ததோடு, அந்த ஊழியரிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளனர். கடை ஊழியர்கள் இனிமேல் இதுபோல் நடக்காது என்று இளைஞரிடம் மன்னிப்பு கோரினார்கள். இந்த சம்பவம் தற்போது அம்மாநிலத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment