இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்க உள்ளது. இதற்கான கொண்டாட்ட முன்னேற்பாடுகளை ஹோட்டல்கள் செய்து வருகிறார்கள். இளைஞர்களும் தங்களுக்கு பிடித்த இடத்தில் புத்தாண்டை வரவேற்பதற்கு தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில் தெலுங்கானா போலிசார் புத்தாண்டு குறித்து மிக முக்கிய அறிவிப்பினை தற்போது அறிவித்துள்ளார்கள்.
அதன்படி டிசம்பர் 31ம் தேதி இரவு எட்டு மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே பார்ட்டிகளை நடத்தவேண்டும் என்றும், சிங்கிளாக வரும் ஆண், பெண்களுக்கு ஹேட்டல்கள் அனுமதி அளிக்க கூடாது என்றும், போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். ஹைதராபாத்தில் நடைபெற்ற வன்கொடுமைக்கு பிறகு மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் நடக்க கூடாது என்பதற்காகவே போலீசார் தனியாக வருபவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று ஹோட்டல் நிர்வாகத்துக்கு வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.