Skip to main content

தடுப்பூசி செலுத்திக்கொள்ளவிட்டால் சம்பளம் கட்! - சத்தீஸ்கர் பழங்குடி நலத்துறை அறிவிப்பு!

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

covid 19 vaccine

இந்தியாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் சத்தீஸ்கரின் மாநிலத்தின் கவுரேலா பேந்த்ரா மார்வாஹி மாவட்டத்தின் பழங்குடி நலத்துறை பணியாளர்கள், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவிட்டால் ஊதியம் நிறுத்திவைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இது அந்த பணியாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பணியாளர்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் அடையாள சான்றின் நகலையும் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை பிறப்பித்துள்ள கவுரேலா பேந்த்ரா மார்வாஹி மாவட்டத்தின் பழங்குடி நலத்துறை துணை ஆணையர் கே.எஸ்.மாஸ்ராம், பணியாளர்களை பயமுறுத்த வேண்டும் என்பது தனது நோக்கமல்ல என்றும், துறை பணியாளர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே தனது நோக்கம் என கூறியுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்தியா உட்பட எந்த நாட்டிலும் கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படவில்லை. அதேநேரத்தில் பல்வேறு நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினரை மட்டுமே தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க முடிவெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

சார்ந்த செய்திகள்

Next Story

“விளக்குமாறு விளங்கிய கையில் செங்கோல்” - வைரமுத்து

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
vairamuthu about sripathy

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி. ஏழ்மை குடும்பப் பின்னணியில் வளர்ந்த ஸ்ரீபதி கல்வியின் முக்கியத்துவம் கருதி வறுமையிலும் போராடிக் கல்வி கற்று பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பு படிக்கும் போது ஸ்ரீபதிக்கு திருமணமான நிலையில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்தச் சமயம் ஸ்ரீபதி  கருவுற்ற நிலையில் தேர்வு தேதியும், பிரசவ தேதியும் ஒரே நாளில் வந்துள்ளது. 

ஆனால் ஸ்ரீபதிக்கு தேர்வுக்கு ஒரு நாள் முன்பே பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் பிரசவமான இரண்டாவது நாளே தன்னுடைய கணவர் உதவியுடன் சென்னைக்கு காரில் வந்து சிவில் நீதிபதி தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். 

இந்த நிலையில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் எக்ஸ் தளத்தில் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜி.வி பிரகாஷ், “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு, மாடல்ல மற்றை யவை” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் அசோக் செல்வன், “தமிழகத்தின் முதல் பழங்குடியினப் பெண் நீதிபதி. மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்” என பதிவிட்டுருந்தார். 

இதனை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து, 

“இரும்பைப் பொன்செய்யும்
இருட்கணம் எரிக்கும்

சனாதன பேதம்
சமன் செய்யும்

ஆதி அவமானம் அழிக்கும்

விலங்குகட்குச் சிறகுதரும்

அடிமைப் பெண்ணை
அரசியாக்கும்

விளக்குமாறு விளங்கிய கையில்
செங்கோல் வழங்கும் 

கல்வியால் நேரும்
இவையென்று காட்டிய
பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி

உன் முறுக்கிய முயற்சியில்
இருக்கிற சமூகம்
பாடம் கற்கட்டும்

வளர்பிறை வாழ்த்து” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

திருக்குறளைக் குறிப்பிட்டு நீதிபதி ஸ்ரீபதிக்கு ஜி.வி பிரகாஷ் வாழ்த்து

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
gv prakash praised judge sripathi

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி. ஏழ்மை குடும்பப் பின்னணியில் வளர்ந்த ஸ்ரீபதி கல்வியின் முக்கியத்துவம் கருதி வறுமையிலும் போராடிக் கல்வி கற்று பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பு படிக்கும் போது ஸ்ரீபதிக்கு திருமணமான நிலையில்  குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்தச் சமயம் ஸ்ரீபதி  கருவுற்ற நிலையில் தேர்வு தேதியும், பிரசவ தேதியும் ஒரே நாளில் வந்துள்ளது. 

ஆனால் ஸ்ரீபதிக்கு தேர்வுக்கு ஒரு நாள் முன்பே பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் பிரசவமான இரண்டாவது நாளே தன்னுடைய கணவர் உதவியுடன் சென்னைக்கு காரில் வந்து சிவில் நீதிபதி தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். 

இந்த நிலையில் ஸ்ரீபதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு, மாடல்ல மற்றை யவை - திருவள்ளுவர்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.