Advertisment

தமிழ்நாட்டை பிரிக்க பரிசீலனையா? - மத்திய உள்துறை அமைச்சகம் பதில்!

MINISTRY OF HOME AFFAIRS

Advertisment

சமீபத்தில், தமிழ்நாட்டிலிருந்து கோவையைப் பிரித்து கொங்குநாட்டை உருவாக்க மத்திய அரசு பரிசீலித்துவருவதாக தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியது. தமிழ்நாட்டைப் பிரிக்க பரிசீலனை நடப்பதாக வெளியான செய்திக்குத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்தநிலையில், தமிழ்நாட்டைஇரண்டாகப் பிரிப்பதுதொடர்பாக எந்தக் கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் தமிழ்நாடுஎம்.பிக்கள் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கான எந்தக் கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கொங்குநாடு குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

MINISTRY OF HOME AFFAIRS Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe