rahul gandhi

மத்திய அரசு, இந்தியத் தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் கீழ், புதிய பாராளுமன்றக் கட்டிடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் மத்திய அமைச்சர்களுக்கான அலுவலகங்கள், பொது மத்திய செயலகங்கள், பிரதமர் இல்லம், குடியரசுத் துணைத் தலைவருக்கான இல்லம் ஆகியவை அமைக்கும் பணிகளும் நடக்க இருக்கின்றன.

Advertisment

இதன்தொடர்ச்சியாக தற்போது மத்திய அரசு, மூன்று மத்திய பொதுச் செயலகங்களை அமைப்பதற்காக டெண்டர்களை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 404 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனைநாட்டில் நிலவவும்கரோனாபாதிப்பு நிலையைச் சுட்டிக்காட்டி, ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Advertisment

ad

மத்திய அரசு டெண்டர் வெளியிட்டுள்ள செய்தியைப் பகிர்ந்துள்ள அவர், "கரோனாநெருக்கடி, பரிசோதனைகள் இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆக்சிஜன் இல்லை. ஐ.சி.யு இல்லை. இதற்கு முக்கியத்துவம்" எனத் தெரிவித்துள்ளார்.