ADVERTISEMENT

“இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு தடை” - பஞ்சாயத்துகளில் தீர்மானம் நிறைவேற்றம்!

02:43 PM Sep 03, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அங்கிருக்கும் அதிகாாிகள் மற்றும் ஊழியா்களைப் பாா்த்து "சாா்" என்றும் "மேடம்" என்றும் அழைப்பது வழக்கமாக உள்ளன. அதேபோல் அந்த அதிகாாிகளிடம் கோாிக்கை மனு கொடுக்கும்போதும் மனுவிலும் சாா் என்றும் மேடம் என்றுதான் குறிப்பிடுகிறாா்கள். மேலும், அங்கு பணிபுாியும் ஊழியா்களும் தங்களுக்குள் இந்த வாா்த்தையைத்தான் பயன்படுத்துகிறாா்கள். இது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளாகியும் தொடா்ந்து நடைமுறையில் மக்கள் பின்பற்றிவருகிறாா்கள்.

இந்நிலையில்தான் கேரளாவில் பாலக்காடு மாத்தூா் கிராம பஞ்சாயத்தில் நேற்று (02.09.2021) வழக்கத்தில் இருக்கும் "சாா்", "மேடம்" வாா்த்தைகளுக்குப் பதில் "சேட்டன்" (அண்ணன்), "சேச்சி" (அக்கா) என்றோ அல்லது அவா்களின் பெயரையோ, அந்தப் பதவியின் பெயரையோ வைத்து அழைக்க வேண்டும் என தீா்மானம் போடப்பட்டது. இது கேரளாவில் அனைத்து தரப்பினாிடமும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று, கோட்டயம் உழவூா் பஞ்சாயத்திலும் இந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த உழவூா் பஞ்சாயத்துதான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கே.ஆா். நாராயணனின் சொந்த பஞ்சாயத்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பஞ்சாயத்தின் தலைவராக ஜோணீஸ் பி. ஸ்டீபன் உள்ளாா். இதுகுறித்து மாத்தூா் பஞ்சாயத்து தலைவி காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பிரவிதா முரளிதரன் கூறும்போது, “பிரிட்டிஷ்காரா் காலத்தில் இருந்தும் அவா்கள் விட்டுச் சென்ற பிறகும் சாா், மேடம் என்ற வாா்த்தையை இன்றுவரை பயன்படுத்திவருகிறோம். இதற்கு ஒரு மாற்றம் கொண்டுவர வேண்டித்தான் இந்த தீா்மானம் எடுக்கபட்டது. எங்களைப் பொறுத்தவரை இது அடிமை வாா்த்தை. மக்களின் தேவையையும் அவா்களின் உாிமையையும் கொடுப்பதுதான் பஞ்சாயத்தாரும் அதிகாாிகளுக்கும் உள்ள கடமை. பஞ்சாயத்தில் உள்ள மக்களின் உாிமைகள் அனைத்தையும் சேவையாக கருத வேண்டும். இதற்காகத்தான் இந்த தீா்மானத்தைக் கொண்டுவந்தபோது அனைத்து உறுப்பினா்களும் (காங்கிரஸ் - 8, கம்யூனிஸ்ட் - 7, பாஜக - 1) ஒருமனதாக ஆதாித்தனா்.

மேலும், அலுவலகத்தில் உாிமையைக் கேட்டு மனு கொடுக்கும்போது 'விண்ணப்ப படிவம்' எனபதற்குப் பதில் 'அவகாச பத்திாிகா' (உாிமை சான்றிதழ்) என மாற்றம் செய்யபட உள்ளது என்றாா். ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன் பனச்சிகாடு பஞ்சாயத்தில் அலுவலகத்தில் உாிமை கேட்டு மனு கொடுக்கும்போது பணிவுடன், தாழ்மையுடன் என்ற வாா்த்தைக்குப் பதில் உாிமையுடன் என்ற வாா்த்தையைப் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், அப்படி பயன்படுத்தும்போது அந்த உாிமை மனுவை தள்ளுபடி செய்தால் அந்த அதிகாாி மற்றும் ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீா்மானம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேரள சட்டமன்ற சபாநாயகா் ராஜேஷ், மாத்தூா் கிராம பஞ்சாயத்தில் கொண்டுவந்த தீா்மானத்தைப் போன்று கேரள சட்டசபையிலும் கொண்டுவர வேண்டுமென்று தனது கருத்தை கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT