இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் 2019 மார்ச் மாதத்திற்குள் மூடப்படும் என நேற்று முன்தினம் ஏடிஎம் இயந்திரங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து ஏடிஎம்களை மூடுவது தொடர்பாக எந்தத் திட்டமும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இல்லை என அறிவித்துள்ளது.

Advertisment

pp

இந்தியாவில் கிட்டத்தட்ட 2.38 இலட்சம் ஏடிஎம்கள் இருக்கிறது. இதில் 1.13 இலட்சம் ஏடிஎம்கள் மூடப்படும் என அந்தக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

Advertisment

பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியா முழுக்க 9,428 ஏடிஎம் மையங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.