Skip to main content

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் வேலை கிடையாது... எங்கே தெரியுமா..?

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் பாஜக-வைச் சேர்ந்த சர்பானந்தா சோனோவால் முதல்வராக பொறுப்பு வகித்து வரும் தூழ்நிலையில் மாநில அரசு தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. முதலமைச்சர் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தான் அந்த அதிரடியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 

sf



அதன்படி, 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசாங்க வேலை இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது அரசாங்க வேலையில் இருப்பவர்களும் இதை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களும், ஏற்கனவே இரண்டு குழந்தை உள்ளவர்களும் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள். அரசின் இந்த முடிவுக்கு அம்மாநில எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்