Skip to main content

பக்ரீத் நாளில் பசுக்கொலைகூடாது - யோகி ஆதித்நாத்

Published on 21/08/2018 | Edited on 21/08/2018

 

yogi

 

 

 

உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்நாத் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் நாளை பசுக்களை கொல்லகூடாது எனவும் அதற்கான நடவடிக்கையை போலீசார் எடுக்கவேண்டும் என போலீசாருக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

 

 

உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே பசு காவலர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு பசு மாட்டை  கொல்வது குற்றம் என கூறி பலர் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர். இதனை தொடர்ந்து  நாளை பக்ரீத் கொண்டாட இருப்பதால் மத்திய பிரதேச மாநிலத்தில் முக்கிய மாவட்டங்களில் பல இடங்களில் பசு மாடுகள் கறிக்காக வெட்டப்படும் எனவே அதை தடுக்க வேண்டும் எனவே சிறப்பு ரோந்துகள் மேற்கொள்ளவேண்டும் என  உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு யோகி ஆதித்நாத் உத்தவிரட்டுள்ளார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

அயோத்தி ராமர் கோயில் திறப்பு; கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட உ.பி. அரசு! 

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Inauguration of Ayodhya Ram Temple; U.P.  Government ordered educational institutions.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநில அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அயோத்தியில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22ம் தேதி மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள் மாநிலத்தில் திறக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நேற்று ராமர் கோயில் திறப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால், 18 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தகவல் பலகைகளை வைக்க வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

வெள்ளத்தில் போராடிய பசுமாட்டைக் காப்பாற்றிய அமைச்சர்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
NN

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டியில் வைகை ஆற்று தண்ணீரில் அடித்து வரப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பசுமாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேற்பார்வையில் மீட்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதை முன்னிட்டு வைகை ஆறு நீர்வரத்து பாதை, குடகனாறு நீர்வரத்து பாதை பகுதிகளில் ஆய்வு செய்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கரைப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஊராட்சி நிர்வாகத்தினர் அவர்களுக்கு முறையான தங்குமிடம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டார்.

NN

அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ரெங்கப்பநாயக்கன்பட்டிக்கு சென்று வைகை ஆற்றுப் பாலத்தில் நீர்வரத்து பாதைகளை ஆய்வு செய்தபோது வைகை ஆற்று வெள்ளத்தில் பசுமாடு ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் உடனடியாக கிராம மக்கள், கட்சி நிர்வாகிகளை அழைத்து உயிருக்கு போரடிக்கொண்டிருந்த பசு மாட்டை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தார்.