''எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை...''- ப.சிதம்பரம் பேட்டி!

சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முயற்சித்து வரும் நிலையில் முன்னாள் நிதி அமைச்சர்ப.சிதம்பரம்டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகதத்தில்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

No charges against me ...- P Chidambaram Interview!

ஜனநாயகம், சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நான் குற்றம்சாட்டப்படவில்லை. என் மீது சிபிஐ, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. சுதந்திரத்தை பெறவும் போராடினோம், தற்போதுசுதந்திரத்தை தற்காத்து கொள்ளவும் போராடி வருகிறோம்.

என் மீதும், என் குடும்பத்தின் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. ஐஎன்எக்ஸ் வழக்கில் எனக்கு எதிராக எந்த குற்றபத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் பல குழம்பங்கள் நிகழ்ந்துள்ளன. பொய்யர்களால் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஏழு மாதங்களுக்கு பின் எனது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

ஜனநாயகத்தின் அடித்தளம் சுதந்திரம் என்பதை நான் நம்புகிறேன். நான் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதாக வெளியான தகவல்களை கடுமையாக மறுக்கிறேன். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குதலைவணங்குகிறேன். தனிமனித சுதந்திரத்தை நீதிமன்றம் காக்கவேண்டும். பாரபட்சமாக விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினாலும் சட்டத்தை மதிக்கிறேன். சிபிஐ, அமலாக்கத்துறை சட்டத்தை மதிப்பது உண்மையெனில் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும். எனக்கூறினார்.

இந்த கூட்டத்தில் கபில் சிபில், அபிஷேக்சிங்வி, சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில்விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

CHITHAMPARAM congres
இதையும் படியுங்கள்
Subscribe