nivar cyclone heavy rains peoples puducherry 144 extend government

Advertisment

'வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால் சூறைக்காற்று வீசியதாலும், தொடர் கனமழை பெய்ததாலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து, மழைநீர் தேங்கியுள்ளது. சீரமைக்கும் பணிகளில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் 'நிவர்' புயல் காரணமாக, விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று (26/11/2020) மாலை 06.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. தண்ணீர் தேங்கி, மரம் விழுந்த பகுதிகளை சீரமைக்கு பணிகள் நடப்பதால் மக்கள் வெளியே வர வேண்டாம்' என பொதுமக்களை புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.