gfhb

Advertisment

மும்பையில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நிதின் கட்கரி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'தங்கள் கனவை தலைவர்கள் நிறைவேற்றுவார்கள் என மக்கள் நம்புகின்றனர். அப்படி நம்பித்தான் வாக்கு அளிக்கின்றனர். அவர்கள் அப்படி நம்பும்போது பொய் வாக்குறுதிகளை கொடுத்து அதனை நிறைவேற்றாவிட்டால் அதே மக்கள் தலைவரை அடிக்கும் சூழ்நிலை கூட உண்டாகும். எனவே அரசியல் தலைவர்கள் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே மக்களுக்கு கொடுக்க வேண்டும்' என கூறினார். இது பாஜக மீதான மறைமுக சாடலாகவே அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்களால் பார்க்கப்படுகிறது.