Advertisment

"கரோனா உயிரிழப்புகளைவிட சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

nitin gadkari

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று (05.07.2021) வாகன விபத்து பாதுகாப்பு தொடர்பான காணொளி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கரோனா உயிரிழப்புகளைவிட அதிகம் என குறிப்பிட்டார்.

Advertisment

காணொளி கருத்தரங்கில் நிதின் கட்கரி பேசியது வருமாறு:

இந்தியாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் அதிகளவிலான சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர். இது கரோனா மரணங்களைவிட அதிகம்.சாலை விபத்து மரணங்களை 50 சதவீதம் குறைப்பதும், 2030ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்து மரணங்கள் ஏற்படாத நிலையை உருவாக்குவதும்தான்எனது நோக்கம்.

Advertisment

சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில்60 சதவீதம் பேர் இருசக்கரவாகன ஓட்டிகள். மோட்டார் சைக்கிள் பயண பாதுகாப்புதான் தற்போதைய தேவை. உலகளவில் வாகனப் பொறியியல் தொழில்நுட்பம் பெரிய அளவில் மேம்பட்டுள்ளது. ஓட்டுநர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பதும், மேம்பட்ட பயிற்சி மையங்களை அமைப்பது முக்கியம்.

நல்ல சாலைகளை உருவாக்குவதும், சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதும் எனது தார்மீக பொறுப்பு.சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நமது இலக்குகளை எட்டவும்அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும்ஒருங்கிணைப்பும் அவசியம்.

இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

corona virus Nitin Gadkari Safety. Roads
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe