தேசிய கீதம் பாடும்போதே நிலைகுலைந்த நிதின் கட்கரி... மேடையில் ஏற்பட்ட பரபரப்பு...

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தேசியகீதம் இசைக்கும்போதே நிலைகுலைந்து இருக்கையில் சாய்ந்தார்.

nitin gadkari fell unconsious in a function

சர்க்கரைநோய் காரணமாக அடிக்கடி நிதின் கட்கரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. ஏற்கனவே கடந்த டிசம்பரில் பொது நிகழ்ச்சி ஒன்றின் மேடையிலேயே மயக்கமடைந்தார். அதுபோலவே கடந்த மே மாதம் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றபோதும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் நிதின் கட்கரி. அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அவர் எழுந்து நின்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு, நிலைகுலைந்து இருக்கையில் சரிந்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவருக்கு உதவி செய்தனர். மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது.

Maharashtra Nitin Gadkari
இதையும் படியுங்கள்
Subscribe