/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nitin-gadkari_2.jpg)
மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி நேற்று ஒரு நிகழ்ச்சியில் மேடையில் பேசியபோது, சாதியை பற்றி பேவோரை அடித்து நொறுக்குவேன் என்றார்.
நேற்று பிம்பிரி சிந்திவாத் என்னும் பூனே நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நிதின் கட்கரி. அதில், எங்களுக்கு சாதியின் மீது நம்பிக்கையில்லை. உங்களிடத்தில் எவ்வளவு சாதிகள் இருக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் எங்களிடம் சாதிகள் இல்லை. ஏனெனில் என்னிடம் சாதியை பற்றி பேசுபவர்களை நான் அடித்து நொறுக்கிவிடுவேன் என்று நான் அனைவரிடமும் சொல்லியிருக்கிறேன்.
மேலும் அவர் சமூகத்திலிருந்து சாதியம், மதவாதம் ஆகியவற்றை வேறுடன் அறுத்தெடுத்து ஒற்றுமையை படரச் செய்ய வேண்டும் என்று கூறினார். பணக்காரன் அல்லது ஏழை என்றும் இருக்க கூடாது. அதே போல உயார்ந்த சாதி அல்லது தாழ்ந்த சாதி என்று எந்தவித வேறுபாடும் இருக்க கூடாது என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)