Advertisment

நான் ஒரு புறம்போக்கு, பரதேசி... வைரலாகும் நித்யானந்தாவின் லேட்டஸ்ட் வீடியோ...

நித்யானந்தா வெளியிட்ட புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

nithyananda latest video

அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் என இந்துக்களுக்கான ஒரு நாடாக நித்தியானந்தா அதனை உருவாக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தினமும் சரியாக 7 மணிக்கு Kailaasa.org என்ற வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிடும் நித்யானந்தா, கடைசியாக பதிவிட்ட வீடியோவில், தன்னை புறம்போக்கு மற்றும் பரதேசி என கூறியுள்ளார். இந்த வீடியோவில் பேசிய அவர், "நான் ஒரு புறம்போக்கு, என்னை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதேபோல நான் ஒரு பரதேசி, நானும் யாரையும் உரிமை கொண்டாட மாட்டேன். பரதேசத்தை மட்டுமே விரும்புபவன்" என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், சாமியார்களுக்கு வெக்கம்,, மானம் இருக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

nithyananda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe