பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா, 2013ஆம் ஆண்டு தனது மூன்று மகள்களையும் பெங்களூரில் நித்யானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். ஆனால் அவர்கள் பெங்களூரில் இருந்து அஹமதாபாத்திலுள்ள நித்தியானந்தாவின் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த செய்தி அறிந்து அதிர்ச்சியான ஷர்மா, தனது மகளைக் காண அஹமதாபாத்திற்குச் சென்றுள்ளார்.

 nithyananda

அங்கு நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்தவர்கள், அவரது மகளைக் காண அனுமதிக்கவில்லை. இதையடுத்து காவல்துறையின் உதவியுடன் ஒரு மகளை மீட்டு வந்து விட்டார். ஆனால் அவர்களது மூத்த மகள்களான லோபமுத்ரா ஜனார்த்தனா சர்மா (21) மற்றும் நந்திதா (18) ஆகியோர் வர மறுத்துவிட்டனர்.

இதையடுத்து ஷர்மா, தனது மகள்களை மீட்டுத் தருமாறு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையும், குஜராத் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஜனார்தன சர்மாவின் இரண்டு மகளுடன் நித்தியானந்தா வெளிநாடு தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தொடர் புகார் வந்து கொண்டிருப்பதால் ஹீராபூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மூட குஜராத் அரசு உத்திரவிட்டுள்ளது.