ADVERTISEMENT

பாஜக தலைமைக்கும் எனக்கும் பிளவு ஏற்படுத்த பார்க்கின்றனர்- நிதின் கட்கரி...

12:16 PM Dec 24, 2018 | santhoshkumar


சமீபத்தில் புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி, “வெற்றிக்கு அனைவரும் பொறுப்பேற்கின்றனர். ஆனால், தோல்விக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை. தோல்விக்கு தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும்” என்று பேசினார்.

ADVERTISEMENT

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோல்வி பற்றியும் அதற்கு கட்சித் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று நிதின் கட்கரி மறைமுகமாக குற்றம்சாட்டுவதாக செய்திகள் வெளியானது. இது கட்சியிலுள்ளும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இந்நிலையில், ட்விட்டரில் இதுகுறித்து நிதின் கட்கரி பதிவிட்டுள்ள பதிவில், “கடந்த சில நாட்களாக நான் கூறிய கருத்தை சில எதிர்க்கட்சிகளும் ஊடகங்களில் ஒரு பிரிவும் அரசியல் ரீதியான உள்நோக்கத்தோடு திரித்து வெளியிடுகின்றன. பாஜக தலைமைக்கும் எனக்கும் இடையே பிளவு ஏற்படுத்த சதி நடக்கிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் வரும்போதெல்லாம் ஏற்கெனவே கடுமையாக மறுத்துள்ளேன். என்மீதான இதுபோன்ற விஷமத்தனமான பொய்யான குற்றச்சாட்டுகளை மீண்டும் மறுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வருகின்ற 2019ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளாரக நிதின் கட்கரியை முன்னிருத்தலாம் என பாஜக மூத்த தலைவர்களும் வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT